உலகம் முழுக்க மிகத் தீவிரமாக பரவிய சார்ஸ் (SARS) வைரஸ் சுமார் 800
பேரை கொன்றது. அது போன்ற ஒரு வைரஸ் தான், இந்த கொரோனா வைரஸ் என்ற ஒரு வகை
நச்சு கிருமி சீனாவில் வேகமாக பரவி வருகிறது. புதிதாக தோன்றியுள்ள இந்த
வைரஸை கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனத்தின் உதவியை, சீனா நாடியுள்ளது.

இந்த வைரஸ் மூச்சு பிரச்சினையை ஏற்படுத்தக்கூடியது.
சளி, இருமல் போன்றவை அறிகுறிகளாம்.
சீனா செல்லகூடிய இந்தியர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
சீனா செல்லும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மாமிசம் தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
சீனா
சென்று வரும் பயணிகளை விமான நிலையங்களில் மருத்துவ சோதனை நடத்தும் படி
மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.இதனை தொடர்ந்து கோவை விமான
நிலையத்திற்கு வரும் பயணிகளிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

No comments:
Post a Comment