ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு ஏற்கெனவே வகுத்துள்ள விதிகளை
பின்பற்றி ஜல்லிக்கட்ட நடத்த வேண்டும் என உயர் நீதிமன்ற கிளை
உத்தரவிட்டுள்ளது.
மதுரை அண்ணாநகரை சேர்ந்த வழக்கறிஞர்
எஸ்.முத்துக்குமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில்,
"அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்பது
வழக்கம். ஆனால் அனைத்து காளைகளும் போட்டியில் அவிழ்ப்பதில்லை.
அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் சிபாரிசின் பேரில் பல காளைகள் போட்டியில் விளையாட விடப்படுகின்றன.
கடந்த
ஆண்டு ஜல்லிக்கட்டில் நூற்றுக்கு மேற்பட்ட காளைகள் பங்கேற்க
அனுமதிக்கப்படவில்லை. எனவே இந்தாண்டு முன்பதிவு செய்த அனைத்து காளைகளையும்
போட்டியில் அனுமதிக்க வேண்டும்' இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஏ.கண்ணன் வாதிட்டார்.
பின்னர்
ஜல்லிக்கட்டு தொடர்பாக அரசு ஏற்கெனவே வகுத்துள்ள விதிகளை பின்பற்றி
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:
Post a Comment