
சென்னை: ஆம்பூர் ஸ்டார் பிரியாணி கடையின் வணிக சின்னத்தை பயன்படுத்த
ஸ்டார் ஆம்பூர் பிரியாணி கடைகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை
விதித்துள்ளது.
ஆம்பூரில் தொடங்கப்பட்ட பாரம்பரியமிக்க ஸ்டார்
பிரியாணி தமிழக முழுவதும், ஆம்பூர் ஸ்டார் பிரியாணி என்ற பெயரில்,
நட்சத்திர வடிவத்திற்குள் "எஸ்.பி." என்ற வணிகக் சின்னத்துடன் அமைத்து
வருகிறது.
இந்நிலையில், தங்களது
பெயரையும், வணிக சின்னத்தையும் பயன்படுத்த ஸ்டார் ஆம்பூர் பிரியாணி கடை
உரிமையாளர் பிர்தோஸ் அஹமது என்பவருக்கு தடை விதிக்க கோரி, ஆம்பூர் ஸ்டார்
பிரியாணி கடை உரிமையாளர் எம்.அனீஸ் அகமது சென்னை உயர் நீதிமன்றத்தில்
வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த
மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், ஆம்பூர் ஸ்டார் பிரியாணி கடை
வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்க அதன் வணிக குறியீட்டை தவறாக
பயன்படுத்தியதற்கான குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் இருப்பதால், ஸ்டார்
ஆம்பூர் பிரியாணி என்ற பெயரை பயன்படுத்த, அதன் உரிமையாளர் பிர்தோஸ்
அகமதுவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
source: oneindia.com
No comments:
Post a Comment