
பெங்களூரு : மக்கள் தொகையில் தங்களுக்கே பெரும்பான்மை உள்ளதாகவும்,
கவனமுடன் இருக்கும்படியும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடும்
சிறுபான்மையினரை பா.ஜ., தலைவர் எச்சரித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி
உள்ளது.குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடந்த ஒரு மாதமாக
கர்நாடகாவில் போராட்டம் நடந்து வருகிறது. வடக்கு கர்நாடகாவின் பல்லாரி
பகுதியில் இஸ்லாமிய சமூகத்தினர் பலர் கண்டன பேரணி நடத்தினர். இதனை
குறிப்பிட்டு பேசிய பா.ஜ., எம்எல்ஏ., சோமசேகர ரெட்டி, மக்கள்தொகையில்
நாங்கள் 80 சதவீதம் உள்ளோம். நீங்கள் வெறும் 15 சதவீதம் தான். நீங்கள்
சிறுபான்மையினர் மட்டுமே. உங்களுக்கு எதிராக போராட பெரும்பான்மையானவர்கள்
தெருக்களில் இறங்கினால் உங்கள் நிலைமை என்ன ஆகும் என யோசித்து பாருங்கள்.
அதனால் கவனமாக இருங்கள் என எச்சரித்துள்ளார்.தொடர்ந்து
அவர் பேசுகையில், சர்ச்சை சட்டம் என கூறி போராடுபவர்கள் பற்றி எம்.பி.,
தேஜஸ்வி சூர்யா கூறியது சரி தான். போராட்டக்காரர்களில் பெரும்பாலானவர்கள்
படிப்பறிவில்லாதவர்கள். அவர்களின் மனதை எதிர்க்கட்சியான காங்., மாசுபடுத்தி
வைத்துள்ளது. கர்நாடகாவில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துபவர்களுக்கு
உ.பி.,யில் நடந்ததை போன்று பாடம் புகட்டப்படும். நாம் இந்தியர்கள்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடுபவர்களை சுடுவதில் தவறில்லை. ஆனால்
அப்போதும் காயமடைந்த உங்களுக்கு சிகிச்சை அளிக்க இந்த டாக்டர் தான் வர
வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment