
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் புதுதில்லி தொகுதியில்
போட்டியிடும் அரவிந்த் கேஜரிவால் 6 மணிநேர காத்திருப்புக்குப் பிறகு
வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
70 உறுப்பினர்களைக் கொண்ட
தில்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 8ம் தேதி தேர்தல்
நடைபெறுகிறது. இதில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் புதுதில்லி
தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் நேற்று (திங்கள்கிழமை) பிற்பகல் 3
மணிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்யவிருந்தார். ஆனால், தனது ஆதரவாளர்களுடன்
சென்ற பேரணி தாமதமானதால் திட்டமிட்டபடி தேர்தல் அலுவலகத்துக்கு 3 மணிக்குள்
செல்ல முடியவில்லை.
இதனால், அவர் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டது.
இதற்காக அரவிந்த் கேஜரிவால் பகல் 12.30 மணியளவில் தேர்தல்
அலுவலகத்தை வந்தடைந்தார். இருப்பினும், வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்று
கடைசி நாள் என்பதால், அரவிந்த் கேஜரிவால் வரிசையில் காத்திருக்க வேண்டிய
சூழல் ஏற்பட்டது. அவருக்கு டோக்கன் எண்.45 வழங்கப்பட்டது.
இதையடுத்து, சுமார் 6 மணிநேர காத்திருப்புக்குப் பிறகு அரவிந்த் கேஜரிவால் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
No comments:
Post a Comment