
பீகார் மாநிலம் முசாபர்பூரில் பிரஜேஷ் தாக்கூர் என்பவர் அரசு நிதி
உதவியுடன் சிறுமியர் காப்பகம் நடத்தி வந்துள்ளார். இந்த காப்பகத்தில் உள்ள
சிறுமிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து
போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில்,
காப்பகத்தில் இருந்து 35 சிறுமிகளை மீட்கப்[டனர். பின்னர் அவர்களுக்கு
நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில், சிறுமிகள் பாலியல் பலாத்காரம்
செய்யப்பட்டது தெரியவந்தது.

இதுதொடர்பாக 20 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதனையயடுத்து இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு
மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த பின்னர், 35 சிறுமிகளை
பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 8 பெண்கள் உட்பட 19 பேர் குற்றவாளிகள்
என டெல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதில், முன்னாள் எம்.எல்.ஏ. பிரிஜேஷ் தாக்கூர் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதில், முன்னாள் எம்.எல்.ஏ. பிரிஜேஷ் தாக்கூர் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment