
ராசிபுரம் அருகே மத்திய அரசின் இந்திராகாந்தி திட்டத்தின் கீழ்
பட்டியலினத்தவர்களுக்கு கட்டப்பட்ட வீடுகள் இடிந்து விழும் நிலையில்
உள்ளதாக அப்பகுதிமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம்
ராசிபுரம் அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தில் சுமார் 300 க்கு மேற்பட்ட
குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு பட்டியலின மக்களுக்கு மத்திய
அரசு கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்திராகாந்தி திட்டத்தின் கீழ் சுமார்
100க்கு மேற்பட்ட வீடுகள் கட்டிதரப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக அந்த
வீடுகள் சிதிலமடைந்து வருகிறது.

இந்நிலையில், தற்போது பெய்து வரும் மழை காரணமாக வீடுகள் முற்றிலும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
மேலும் இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள்
கூறுகையில், சிதிலமடைந்துள்ள வீடுகள் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக
கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தூங்கிகொண்டிருந்த துரைசாமி மற்றும்
அவரது மகன் மீது மேற்கூரை விழுந்து 2 பேரும் படுகாயமடைந்தனர்.
இதேபோல்
அனைத்து வீடுகளும் எந்தநேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
அதன்காரணமாகவே பெரும்பாலும் இரவில் வீட்டில் தூங்காமல் குழந்தைகளும் ஒருவித
அச்சத்துடனேயே வெளியில் படுத்து உறங்குகின்றனர். இது குறித்து பலமுறை
பேரூராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை
மேற்கொள்ளவில்லை. அரசு உடனடியாக கவனத்தில்கொண்டு வீடுகளை சீரமைத்து
தரவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment