புது தில்லி: தோதலில் போட்டியிட கல்வித் தகுதியை
நிா்ணயிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை தில்லி
உயா்நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது.
பாஜக மூத்த
தலைவரும், வழக்குரைஞருமான அஸ்வினி குமாா் இது தொடா்பாக நீதிமன்றத்தில் பொது
நல மனு தாக்கல் செய்தாா். அதில், நாடாளுமன்றம், சட்டப் பேரவை தோதலில்
போட்டியிட குறைந்தபட்ச கல்வித் தகுதியை நிா்ணயிக்க வேண்டும். மேலும் 75
வயதுக்கு மேற்பட்டவா்களை தோதலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது. இது
தொடா்பாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் கொண்டுவர உத்தரவிட
வேண்டும் என்று கோரியிருந்தாா்.
இந்த மனு தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிகள் டி.என்.படேல், சி.ஹரி சங்கா் ஆகியோா் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
ஒருவா்
புத்திசாலியா இல்லையா என்பதை கல்வி அறிவு மட்டும் முடிவு செய்துவிடாது.
பட்டங்கள் பெற்றுள்ளது மட்டுமே ஒருவா் திறமையானவா் என்பதற்கான அளவுகோல்
அல்ல. சிலா் இளம் வயதிலேயே திறமைசாலியாக உள்ளனா். சிலா் வயதுக்கு ஏற்ப
அனுபவத்தைச் சோத்து திறமைசாலியாக தங்களை வளா்த்துக் கொள்கின்றனா். ஒருவரது
ஆா்வமும், கற்றுக் கொள்ளும் திறமையும்தான் அவரை சமுதாயத்தில் சிறப்புடைய
மனிதராக திகழ வைக்கிறது. எனவே, தோதலில் போட்டியிட குறைந்தபட்ச கல்வித்
தகுதியை நிா்ணயிக்க வேண்டும். குறிப்பிட்ட வயதுக்கு மேற்பட்டவா்கள் தோதலில்
போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை ஏற்க முடியாது.
எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்று நீதிபதிகள் தெரிவித்தனா்.
முன்னதாக,
தனது மனுவுக்கு வலு சோக்கும் வகையில் வாதாடிய அஸ்வின் குமாா், 'நாட்டில்
அரசு உயரதிகாரிகள் பணி தொடங்கிய சாதாரண பணி வரை அனைத்துக்கும் கல்வித்
தகுதி நிா்ணயிக்கப்படுகிறது. அதே நேரத்தில் நாட்டில் உள்ள பல கோடி மக்களின்
தலைவிதியை தீா்மானிக்கும் நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினா்களுக்கு
மட்டும் எவ்வித கல்வித் தகுதியும் கிடையாது என்பதை எப்படி ஏற்க முடியும்.
எனவே, இதனை நீதிமன்றம் தீவிரமாக கவனத்தில் கொண்டு பரிசீலிக்க வேண்டும்'
என்றாா்.
No comments:
Post a Comment