ரஜினி, கமல் மட்டுமல்ல ரஜினி, கமல், விஜய் சேர்த்து வந்தாலும்
அதிமுக சிங்கிளாக எதிர்க்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நானும்,
ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் இணைவோம் என்றும் தமிழகத்தின்
மேம்பாட்டிற்காக சேர்ந்து பயணிக்க வேண்டுமென்றால் பயணிப்போம் என்றும்
மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் இன்று தெரிவித்திருந்தார்.
கமல்ஹாசனின் கருத்துக்கு பச்சைக்கொடி காட்டும் விதமாக மக்களின் நலனுக்காக
நிச்சயம் நானும் கமலும் இணைந்து பயணிப்போம் என தடாலடியாக ரஜினிகாந்த்
தெரிவித்துள்ளார். இரு பெரு நடிகர்கள் திரையில் மட்டுமல்ல அரசியலிலும்
இணைந்து பயணிப்போம் என பேசியது தமிழக அரசியலில் சலசலப்பை
ஏற்படுத்தியுள்ளது.
ரஜினி, கமல் கருத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்
ஜெயக்குமார், "ரஜினி, கமல், விஜய் எந்த நடிகராக இருந்தாலும், நடிகர்களைத்
தவிர யாராக இருந்தாலும் சரி, அரியணை ஏற வேண்டும் என்ற எண்ணம் ஜனநாயகமானது.
ஆனால் ஒரு நல்ல அரசை விமர்சனம் செய்யும்போதும் கட்சி மீது கல்லெடுத்து
அடிக்க நினைத்தால் அது வீணாக அவர்களைத்தான் காயப்படுத்தும். பந்தை எங்கள்
மீது வீச பார்த்தால் நாங்கள் அவர்கள் மீது திருப்பி வீசுவோம். ரஜினி, கமல்
மட்டுமல்ல ரஜினி, கமல், விஜய் சேர்த்து வந்தாலும் அதிமுக சிங்கிளாக
எதிர்க்கும். கருணாநிதி போன்ற ஜாம்பவான்களை கண்ட எங்கள் கட்சிக்கு, ரஜினி,
கமல் போன்றோர் வெறும் எண்ணிக்கைத்தான். ரஜினி, கமல் இருவரும் இணைந்தாலும்,
தனித்து இருந்தாலும் அதைபற்றி எங்களுக்கு கவலையில்லை
எத்தனையோ
இடர்பாடுகள், ஏளனங்கள், கேளிகள், கண்டனங்கள் இருந்தாலும் அதை
பொருட்படுத்தாமல் நாங்கள் முன்னேறி சென்றுகொண்டிருக்கிறோம். 2021 அதிமுக
ஆட்சி அதிசயம் நடைபெறும். உள்ளாட்சி, நல்லாட்சி என்ற அதிசயம் நடைபெறுமா
என்றால் அது நடைபெறும். அவர்கள் கூறுவது போல் வேறு எந்த ஒரு அதிசயமும்
நடைபெற வாய்ப்பில்லை" என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment