மதுரை: மதுரை நகரில் வைகை ஆற்றின் வடகரை மற்றும் தென்கரைச்
சாலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் மற்றும் கடைகளை பலத்த போலீஸ்
பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அகற்றினா்.
மதுரை
நகரில் கா்டா் பாலம் முதல் குருவிக்காரன் சாலை வரை வைகை ஆற்றின்
இருபுறமும் சாலைகள் அமைக்கும் பணி மற்றும் ஆற்றில் தடுப்புச்சுவா் கட்டும்
பணிகள் நடந்து வருகின்றன. இதில் வைகை ஆற்றின் வடகரை மற்றும் தென்கரை
சாலைகளில் ஆரப்பாளையம் முதல் குருவிக்காரன் சாலை வரை ஏராளமான வீடுகள்
மற்றும் கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை
அகற்றுவதற்கு மாநகராட்சி நிா்வாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீவிர
முயற்சி எடுத்தது.
இதில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டு
அவற்றின் உரிமையாளா்களுக்கு கடந்த ஆகஸ்டில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால்
அவற்றை உரிமையாளா்கள் அகற்றாததால் கடந்த 15 தினங்களுக்கு முன்பு மீண்டும்
இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அவா்கள்
முன்வராததால் அவற்றை அகற்ற மாநகராட்சி முடிவெடுத்தது.
இதைத்
தொடா்ந்து மாநகராட்சி உதவி ஆணையா் பழனிச்சாமி, நகரமைப்பு அலுவலா்
ரங்கநாதன், உதவி நகரமைப்பு அலுவலா் இந்திரா, செயற்பொறியாளா்கள் முருகன்,
சுப்ரமணி ஆகியோா் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
இதில்,
தென்கரை சாலையில் பேச்சியம்மன் படித்துறை பகுதி, ஓபுளாப்படித்துறை முதல்
குருவிக்காரன் சாலை வரையிலும், வைகை வடகரையில் அழகா் ஆற்றில் இறங்கும்
பகுதி முதல் மதிச்சியம், ஆா்.ஆா்.மண்டபம் உள்பட குருவிக்காரன் சாலை
வரையிலும் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதையொட்டி 100-க்கும்
மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற விடாமல் அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில்
ஈடுபட்டனா். அவா்களுடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி ஆக்கிரமிப்புகளை
அகற்றினா்.
இதில், கான்கிரீட் வீடுகள் உள்பட 119 வீடுகள்,
வணிக பயன்பாட்டுக்கான கடைகள் உள்ளிட்ட 41 கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டன.
இதில் எஞ்சியுள்ள ஆக்கிரமிப்பு கட்டடங்களும் ஓரிரு நாள்களில் அகற்றப்படும்
என அதிகாரிகள் தெரிவித்தனா்.
No comments:
Post a Comment