வீட்டின் அருகே கழிப்பறை கட்ட எதிர்ப்பு தெரிவித்ததால் பெண் ஒருவர்
தனது 3 குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி
செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் அருகே புளிய
ராஜக்காபட்டி கிராமத்தை சேர்ந்தவர் தனம். இவர் வீட்டின் அருகே புதிதாக
கழிப்பிடம் கட்ட முயன்றுள்ளார். ஆனால் பக்கத்து வீட்டுக்காரர் அதற்கு
எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனம் திண்டுக்கல் தாலுகா காவல்
நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் காவல்துறையினர் புகாரை வாங்க
மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் தனம் தனது மூன்று குழந்தைகளை அழைத்துக்கொண்டு இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றார்.
அங்கு தன் மீதும் மூன்று குழந்தைகள் மீதும் மண்ணெண்ணெய்
ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைப்பார்த்த பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி அழைத்துச்
சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
No comments:
Post a Comment