கொழும்பு: நான் அனைத்து மக்களுக்குமான அதிபர் என்று இலங்கையின் அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்புத்துறை செயலர் பெரு கோதபய ராஜபக்ச வெற்றி பெற்றார்.
அவர்
தன்னை எதிர்த்து போட்டியிட்ட சஜித் பிரேமதாசாவை விட ஏறக்குறைய 13 லட்சம்
வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
திங்களன்று அவர் முறைப்படி அந்நாட்டின் அதிபராக பொறுபேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் நான் அனைத்து மக்களுக்குமான அதிபர் என்று இலங்கையின் அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக செவ்வாயன்று அவர் கூறியுள்ளதாவது:
நான் அனைத்து மக்களுக்குமான அதிபர்; எனக்கு தேவை அனைவரின் ஆதரவும் தான்
எனக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என அனைவரின் ஆதரவும் எனக்கு
தேவை; சுபீட்சமான ஒருநாட்டை கட்டியெழுப்புவதற்கு தேவை அனைவரின் ஆதரவும் தான்
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment