புதுச்சேரியில் நடைபெற்ற இந்திய நிதி கூட்டாட்சியில் உள்ள சவால்கள்
தொடர்பான தேசிய கருத்தரங்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி
செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``உள்ளாட்சித் தேர்தல்
வந்தால் அதில் அ.தி.மு.க வெற்றி பெறுவதற்கான வாய்ப்பில்லை.
கனிமொழி
அதை உணர்ந்து கொண்டுதான் மேயர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் முறையைக் கொண்டு வந்திருக்கின்றனர்.
தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறுவதுபோல் அ.தி.மு.க-வினர்
உள்ளாட்சித் தேர்தலில் பல குழப்பங்களை விளைவிக்க முயற்சி செய்து
வருகின்றனர்.
தி.மு.க தலைவர் தொடர்ந்து வலியுறுத்தியதால்தான் தற்போது
உள்ளாட்சித் தேர்தலைக் கொண்டு வருகின்றனர். இருந்தாலும் மக்களை ஏமாற்றி,
தகிடுதத்தம் செய்து வெற்றிபெற்றுவிடலாம் என்று நினைக்காமல் குழப்பங்கள்
இல்லாமலும், நேர்மையான முறையிலும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்.
நான் உட்பட பல எம்.பி-க்களுக்கு நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி வந்து
சேரவில்லை" என்று கூறியவரிடம் ரஜினி, கமல் இணைந்து அரசியலை சந்திப்பது
குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.
செய்தியாளர் சந்திப்பில் கனிமொழி
அந்தக் பதிலளித்த கனிமொழி, ``கமல்ஹாசன் அரசியலுக்கு வந்துவிட்டார். இன்னொருவர் வருவாரா இல்லையா என்பது இன்னமும் முடிவாகவில்லை.
அவர்
கட்சித் தொடங்கி இருவரும் இணைந்து, அந்த அறிவிப்பு வந்த பிறகு
பார்க்கலாம். அதுவரை அதைப் பற்றி நான் கருத்து சொல்ல வேண்டிய அவசியமில்லை.
`தமிழக அரசியலில் ஆளுமை வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது' என்று நடிகர்
ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார். ஆனால், எங்களைப் பொறுத்தவரை கடந்த
நாடாளுமன்றத் தேர்தலிலேயே தமிழகத்தில் ஆளுமை வெற்றிடம் இல்லை என்பதை
நிரூபித்திருக்கிறோம். ஜம்மு காஷ்மீரில் என்ன நடக்கிறது என்று
தெரிந்துகொள்ள இங்கிருக்கும் ஊடகங்களுக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும்
அனுமதி மறுக்கப்படுகிறது.
முதல்வர் நாராயணசாமியுடன் கனிமொழி எம்.பி
ஆனால்,
வெளிநாட்டில் உள்ள எம்.பி-க்களை அழைத்து வந்து காட்டுகிறார்கள். அதையும்
தாண்டி பரூக் அப்துல்லா போன்ற பல அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு
இவ்வளவு நாள் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களை விடுதலை செய்து
நாடாளுமன்றத்துக்குள் வர அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை
வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்குக்கூட மத்திய பா.ஜ.க அரசு இதுவரை
சரியான பதிலை அளிக்காமல் மௌனம் காக்கிறது" என்றார்.
No comments:
Post a Comment