Latest News

டில்லியில் மிரட்டுது காற்று மாசு ; விமான சேவை பாதிப்பு

புதுடில்லி : புதுடில்லியில் அதிகரிக்கும் காற்று மாசுபாட்டால் விமான சேவை உட்பட நகரில் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.டில்லியில் காற்று தர மதிப்பீடு அளவு 625 என்ற அபாயகரமான நிலையில் இருக்கிறது. இதை கட்டுப்படுத்தும் நோக்கில் டில்லி அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக மாணவர்களுக்கு முகமூடிகள் வழங்கும் திட்டத்தை துவக்கியது. நாளை (நவ.,4) முதல் வாகன கட்டுப்பாடு விதிகளும் பின்பற்றப்படுகிறது. ஆனாலும், மாசடைந்த காற்றினால் டில்லி முழுவதும் புகைசூழ்ந்து காணப்படுகிறது. இதனால், ஜெய்ப்பூர், அமிர்தசரஸ், லக்னோவுக்கு செல்லும் 37 ஏர் இந்தியா விமானங்கள் திருப்பி விடப்பட்டன.தொடர்ந்து டில்லியில் இன்று (நவ.,3) நடக்க இருக்கும் இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான 'டுவெண்டி-20' கிரிக்கெட் போட்டி நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது போட்டி துவங்கியுள்ளது. காற்று மாசுபாட்டை குறைக்க, மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வாகனங்கள் மூலம் நீர் பீய்ச்சி அடிக்கப்பட்டுள்ளது. மேலும், போட்டியை காணவரும் ரசிகர்களும் சுவாச கவசத்தை அணிந்து வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் மோசமடைந்து வரும் காற்று மாசு குறித்து உயர்மட்ட கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமரின் முதன்மை மெயலாளர் பி.கே மிஸ்ரா மற்றும் அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா கலந்து கொண்டனர். கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்வதாக கூறப்பட்டது.காற்றின் மாசு அளவு அதிகாரித்து அதன் தரம் பல இடங்களில் கடுமையாக உள்ளது.

இதன் காரணமாக டில்லியில் பொது சுகாதார அவசர நிலையை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தொடர்ந்து மாசு காரணமாக டில்லி மற்றும் நொய்டாவில் 2 தினங்களுக்கு பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதிகரிக்கும் புகைமூட்டத்தால் விமான போக்குவரத்து சேவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. 37 விமானங்கள் மற்ற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. இதனால் டில்லி விமானநிலையத்தில் பயண சேவையில் பெரும் இடையூறு ஏற்பட்டதால் பயணிகள் பாதிப்படைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.