சவூதி மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் இன்று வெளியிட்டுள்ள அரசாணை ஒன்றின் மூலமாக
சவூதி வார விடுமுறை நாள்களை வியாழன் வெள்ளி என்பதிலிருந்து வெள்ளி, சனி என்று மாற்றி அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
1). அமைச்சகங்கள், நிதியகங்கள், அரசு அலுவலகங்கள், சவூதி மைய வங்கி, பங்குச் சந்தை, ஆகியவை இனி ஞாயிறு முதல் வியாழன் வரை இயங்கும். வெள்ளி, சனி ஆகிய இரு நாள்கள் இனி வார விடுமுறையாகக் கருதப்படும். இந்த மாற்றம் இம்மாதம் 29 ஜூன் முதலே நடைமுறைப்படுத்தப்படும்.
2). பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பாட சாலைகள் ஆகியவை இந்த விடுமுறை நாள் மாற்றத்தை அடுத்த கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்த வேண்டும்.
No comments:
Post a Comment