கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே ரீத்தாபுரம் பகுதியை
சேர்ந்தவர் செபியா மேரி. 28 வயதாகும் இவர் ஆசிரியர் பயிற்சி பெற்றுள்ளார்.
இவரது கணவர் பெனிராஜ் கூலி தொழிலாளி. இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள்
இருந்துள்ளது. இவர்களின் வீட்டுக்கு அருகில் குடுகுடுப்பை அடித்து
குறிசொல்லும் குடும்பம் ஒன்று இருந்துள்ளது. 8 பேர் கொண்ட அந்த
குடும்பத்தினர் ஊர் ஊராக சென்று குறி சொல்லி வருகிறார்.
கடந்த நவம்பர் 13 ஆம் தேதி இந்த குடுகுடுப்பை குடும்பம் செபிலா மேரியின்
கணவரின் கைகளை பார்த்து குறி சொல்லியுள்ளனர்.
அப்போது செபியா மேரியின் கணவருக்கு தோஷம் உள்ளதாகவும்
அதனால் அவர் உயிருக்கு ஆபத்து. எனவே தோஷ நிவர்த்தி செய்யவேண்டும் என்றும்
கூறியுள்ளனர். மேலும் பூஜையால் பெரும் செல்வந்தர் ஆகலாம் என்று கூறி ஆசையை
தூண்ட பூஜை செலவுக்காக 2500 ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார் செபியா மேரி
அதன்படி
மஞ்சள் துணி மற்றும் சிறிய அளவிலான மண் கலசம் ஒன்றை கொடுத்து அதில்
வீட்டில் உள்ள நகைக்களை மஞ்சள் துணியில் கட்டி உள்ளே வைத்து பீரோவில்
வையுங்கள். நாளை வந்து தோஷத்தை கழிக்கிறோம் என்று சொல்லி சென்றுவிட்டனர்.
செபியா மேரியும் வீட்டிலிருந்த 10 சவரன் நகையை அதில் வைத்து பீரோவில்
வைத்துள்ளார். மறுநாள் சொல்லியபடியே வந்த அந்த கும்பல், செப்பு தகட்டில்
பெயர்களை பொறித்து கொண்டு வந்து எலுமிச்சை பழம் மற்றும் தங்க நகைகள் இருந்த
கலசத்தையும் வைத்து மாந்திரீக பூஜையில் இறங்கியது. பின்பு வீட்டிலுள்ள
உப்பு, நீரை கொண்டு வா என்று செபியாவை அனுப்பியுள்ளனர். அவர் கொண்டு வந்த
பிறகு அதை தெளித்து பூஜையை முடித்து விட்டதாக கூறியுள்ளனர்.
இறுதியாக
தங்க நகைகள் இருந்த கலசத்தையும், , தலையில் தேய்த்துக் குளிக்க ஒரு
எண்ணெய் பாட்டிலும் கொடுத்துவிட்டு நாளை குளித்து முடித்துவிட்டு, கலசத்தை
திறந்து நகைகளை எடுத்துக்கொள்ளுங்கள், தோஷம் நீங்கி விடும் என்று கூறி
கிளம்பியுள்ளனர்.அதை பயபக்தியாக வாங்கி வைத்த செபியா மேரி மறுநாள் காலை
திறந்து பார்த்தால் உள்ளே கற்கள் இருந்துள்ளது. அப்போது தான் தான் ஏமாந்து
போனது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து
குளச்சல் காவல் நிலையத்தில் செபியா மேரி புகார் அளித்தார். புகாரின்
பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த மோசடி கும்பலை தேடி
வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment