மாணவர்களின் நலன் கருதி பள்ளி கல்வி துறை பல்வேறு அறிவிப்புகளை
வெளியிட்டுவருகிறது. அந்த வகையில் இனி ஒவ்வொரு பாட இடைவெளி முடிந்ததும்
மாணவர்கள் தண்ணீர் அருந்த 10 நிமிடம் இடைவெளி விடப்படும் என பள்ளி கல்வி
துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பள்ளி கல்வி துறை
சார்பில் ஏற்பட்டு செய்யப்பட்டிருந்த குழந்தைகள் தின விழா மேடையில்
அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார். விழாவிற்கு பின் செய்தியாளர்களை
சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் இதனை அறிவித்தார். இதுபற்றி அவர்
கூறியதாவது.
இனி
பள்ளிகளில் வேலை நேரங்களில் ஒவ்வொரு வகுப்பு முடித்த பிறகும் மாணவர்கள்
தண்ணீர் அருந்துவதற்காக 10 நிமிடம் ஒதுக்கப்படும் எனவும், மாணவர்கள் போதிய
அளவு நீர் அருந்தாததால் பல்வேறு உபாதைகள் ஏற்படுவதாகவும், இதனை
தவிர்க்கவும், மாணவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் வாழவும், கல்வி கற்கவும்
இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment