ராம்ஜன்ம பூமிவழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ளதீர்ப்பை
மறுபரிசீலனை செய்ய வேண்டுமா வேண்டாமா என்பது குறித்த ஓர் தீர்மானத்திற்கு
வருவதற்காக இன்று சந்தித்தஅகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், உச்ச
நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராகமறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்வதாக முடிவு
செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பல
ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்த அயோத்தியாவின் ராம்ஜன்ம பூமி
வழக்கில்,சர்ச்சைகுரிய நிலம் அரசாங்கத்திற்கே சொந்தம் என்றும், அந்த
இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் தொடங்கலாம்
என்றும்,முஸ்லிம்களுக்கு வேறு பகுதியில் 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும்
என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு.
இதை தொடர்ந்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக
மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்வதா வேண்டாம் என்பதுகுறித்த
கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்த அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்,
இஸ்லாமியர்களுக்கென்று சேர வேண்டிய இடம் அவர்களுக்கு தான் வேண்டும்
என்றும், வேறு பகுதியில் நிலம் வேண்டாம் என்பதால், உச்ச நீதிமன்றம்
வழங்கவுள்ள 5 ஏக்கர் நிலம் தங்களுக்கு வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.
இவர்களை
தொடர்ந்து, இன்று சந்தித்த ஜமாய்த் உலாமா ஐ ஹிந்த் அமைப்பும் உச்ச
நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யவிருப்பதாக
அறிவித்துள்ளது.
தகவல் : https://www.blogger.com/blogger.g?blogID=2064496067342035438#editor/target=post;postID=1572802849376191134
No comments:
Post a Comment