
வேதாரண்யம்
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியை சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் ஜீப்பில் சென்று கொண்டிருந்தபோது, வேதாரண்யம் போலீஸ் நிலையம் ராமச்சந்திரன் (24) என்பவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதுதொடர்பாக அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு, இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதமாக மாறியது.
இதன்பின்னர் போலீஸ் நிலையம் முன்பு நின்ற ஜீப்புக்கு ஒரு கும்பல் திடீரென தீ வைத்தனர். மேலும் இருதரப்பினரும் கைகளாலும், கம்புகளாலும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இந்த மோதலில் ராமச்சந்திரனை, ஒரு தரப்பினர் அரிவாளால் வெட்டினர். இதைத்தொடர்ந்து படுகாயம் அடைந்த 2 பேரும் நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த கலவரத்தில் வேதாரண்யம் பேருந்து நிலையம் பகுதியில் ஒரு கும்பல், அங்கிருந்த அம்பேத்கார் சிலையை அடித்து நொறுங்கி சேதப்படுத்தினர். மேலும் நேற்று இரவு முதல் அதிவிரைவு படை வீரர்களும் வரவழைக்கப்பட்டு வேதாரண்யம் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கலவரம் காரணமாக வேதாரண்யம் பகுதியில் இன்றும் 2-வது நாளாக பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. வேதாரண்யம் பஸ் நிலையத்தில் இன்று காலை 8.30 மணியளவில் குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்பட்டன.
Dailyhunt
No comments:
Post a Comment