
கிரீஸ்: காட்டுத் தீ கனலை கக்குவதால் மக்கள் அச்சம்...சமோஸ் என்ற கிரீஸ் தீவில் பற்றி எரியும் காட்டுத் தீ கனலைக் கக்கி சாலையில் செல்வோரை அச்சுறுத்தும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
கிழக்கு Aegean கடற்பகுதியில் அமைந்துள்ள கிரீஸ் தீவான சமோசில் கடந்த சனிக்கிழமை முதல் காட்டுத் தீ பற்றி எரிகிறது. தீயைக் கட்டுப்படுத்த ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
அங்கிருந்து வெளியேறும் மக்கள் மீது, எரிந்துபோன மரக்கிளைகளின் கனல்கள் விழுவதால் மக்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பயணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பிரேசில், பொலிவியா, அமெரிக்கா, கிரீஸ் என உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள வனங்களில் பற்றி எரியும் காட்டுத் தீயானது புவி வெப்ப மயமாதலின் உச்சகட்ட எச்சரிக்கை என சூழலியல் ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
Dailyhunt
No comments:
Post a Comment