Latest News

  

கடுமையான வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட அமைச்சர் ரிஷாட், எம்.பி., சார்ள்ஸ் நிர்மலநாதன்

கொழும்பு: ரிஷாட்-சார்ள்ஸ் நிர்மலநாதன் மத்தியில் வாய்த்தரக்கம்...மன்னார், மறிச்சிக்கட்டி கமநல சேவை நிலையத்தின் திறப்பு விழாவில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

மன்னார், உயிலங்குளம் பகுதியில் கமநல சேவைகள் நிலையத்தின் கட்டடம் ஒன்று இன்று (திங்கட்கிழமை) விவசாய மற்றும் மீன்பிடி அமைச்சர் ஹரிசன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வு கமநல சேவைகள் நிலையத்தின் நிகழ்வாக இருந்த போதும் குறித்த நிகழ்வினை அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆதரவாளர்களே நடத்தியிருந்தனர்.

இதன்போது அமைச்சர் ரிசாட் பதியுதீனை முன்னுரிமைப்படுத்தும் வகையில் ஏற்பாட்டாளர்கள் செயற்பட்டனர். மேடையில் மொழிபெயர்ப்பு செய்து அறிவிப்பு செய்தவர் ஒன்றுக்கு பல தடவை தேசியத் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் என அடிக்கடி விழித்துக் கொண்டார்.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், அமைச்சர் ஹரிசனிடம் நீங்கள் பிரதம அதிதி என்பதால்த் தான் நான் இந்த நிகழ்விற்கு வருகை தந்தேன் என கூறியுள்ளார். இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன், "நீங்கள் என்னைப் பற்றி எப்போதும் தவறாக பேசிக்கொண்டிருக்கின்றீர்கள். நாடாளுமன்றத்திலும் என்னைப் பற்றி தவறானவற்றை கூறிவருகின்றீர்கள்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த நீங்கள் என்னைப் பற்றி எப்படி பேசுவீர்கள். பழைய அரசியல்வாதிகள் எல்லாம் அமைதியாக இருக்கும் போது நேற்று வந்த நீங்கள் எப்படி என்னைப் பற்றி பேச முடியும். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். இனிமேல் நான் யார் என்பதை உங்களுக்கு காட்டுகின்றேன்" என கடுமையாக எச்சரித்தார்.

உணவருந்த சென்ற வேளையிலும் இருவரும் முரண்பட்டனர். மேலும் தவறான வார்த்தைப் பிரயோகங்களையும் அரசியல் நாகரீகமற்ற முறையிலும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நடந்து கொண்டிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Dailyhunt

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.