
ஜம்மு - காஷ்மீரில் நடைமுறையில் இருந்த சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டபோது அம்மாநிலத்தில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசின் இந்த நடவடிகைக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. ஆதரவாளர்கள் தங்கள் வெற்றியைக் கொண்டாடும் அதேவேளை, சிறப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்து எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

kashmir police
இந்த நிலையில், நேற்று நடந்த போராட்டத்தில் கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இதில் தவறுதலாகச் சிக்கி பலத்த காயமடைந்த ட்ரக் டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதை ஜம்மு- காஷ்மீர் காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.
`ஜம்மு- காஷ்மீரின் அனந்த்நாக் (Anantnag ) மாவட்டம் பிஜ்பெரா (Bhijbhera) பகுதியைச் சேர்ந்த 42 வயதான நூர் முகமது என்பவர் தன் வீட்டுக்குச் சென்றுகொண்டிருக்கும்போது, அங்கிருந்த போராட்டக்காரர்கள் எதிரே வருவது ராணுவ வாகனம் என நினைத்து ட்ரக் மீது கல் எரிந்து தாக்குதல்
kashmir police tweet
இந்தத் தாக்குதலில் நூர் முகமது தலையில் பலத்த அடிபட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து ஸ்கிம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கல் எரிந்தவர் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்' என ஜம்மு - காஷ்மீர் காவலர்கள் ட்வீட் செய்துள்ளனர்.
நடத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment