
பள்ளி மாணவர்கள் , அறிவியல், கணிதம், சமூக அறிவியல் எனப் பாடப்புத்தகங்களை படித்து பல்வேறு நிலைகளுக்கு உயர்கிறார்கள். அவர்களைச் சுற்றியும் ஏராளமான விஷயங்கள் உள்ளன. இதைப் பள்ளியில் படிக்கும்போதே தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகச் சுட்டி விகடனோடு ஒவ்வொரு மாவட்டத்தின் சிறப்புகளையும் தொகுத்து சிறப்பிதழாக வழங்கப்பட்டு வருகிறது.
சுட்டி விகடன்
புத்தகங்களை வழங்கி அவர்களைப் படிக்க வைக்க வேண்டும், படித்ததை எதிர்காலத்தில்பயன்பட வேண்டும் என்ற வகையில் OMR sheet கொண்டு தேர்வு நடத்தப்படுகிறது. சிறப்பாகச் செயல்படும் மாணவர்களையும், பள்ளிகளையும் ஊக்குவிக்கும் வகையில் சான்றிதழையும், நினைவு கோப்பையும் வழங்கப்பட்டு வருகிறது.
வெற்றிபெற்ற மானவர்களுக்குப் பரிசு வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்தத் தேர்வில் 54 அரசுப் பள்ளிகள் உட்பட 118 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 24,000 மாணவர்கள் கலந்துகொண்டனர். இதில் 1,260 மானவர்கள் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த விழாவில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாக்கூர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
சுட்டி விகடன்
மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட உதவி காவல்துறை கண்காணிப்பாளர் சிவராஜ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜராஜன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ம.க.செ. சுபாஷினி, சாத்தூர் வட்டாச்சியர் மாரிமுத்து, AAA பொறியியல், மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் செயலாளர் கார்வண்ணன், தியாகராசர் கல்லூரியின் முன்னாள் முதல்வர் இராஜா கோவிந்தசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.



No comments:
Post a Comment