
மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு, மது குடிப்பதனால் உடல் நலம் பாதிக்கப்படுகிறது என எத்தனையோ விழுப்புணர்வுகள் ஏற்படுத்தியும் மது அருந்துதல், புகை பிடித்தல், போதை பொருட்களுக்கு அடிமையாகுதல் என இதனால் பாதிக்கப்படுபவர்களின் எணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.
இதில் கொடுமை என்னவென்றால் பள்ளி குழந்தைகளும் இந்த போதை பொருட்களுக்கு அடிமையாகிவருவதுதான் கொடுமையின் உச்சம். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் நடந்த மக்களவை கூட்டத்தில் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் தாவர் கூறுகையில்

இந்திய அளவில் 16 கோடி மக்கள் மது குடிப்பதாகவும், 3.1 கோடி மக்கள் போதைப் பொருள் பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். 136 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் சுமார் 20 கோடி பேர் மது பழக்கத்திற்கும், போதை பழக்கத்திற்கும் அடிமையாகியுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

No comments:
Post a Comment