
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர்தேதி குறிப்பிடாமல் இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூன் 28ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம், மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்குஇரங்கல் குறிப்பு வாசிப்பு நடைபெற்றது. பின்னர் அன்றுநாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பின்னர், வார விடுமுறைக்குப் பின்னர் ஜூலை 1-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை தொடங்கி விவாதம் நடைபெற்றது.
தொடர்ந்து, சட்டப்பேரவையில் பல்வேறு துறைகளில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. சட்டப்பேரவை விதி 110ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். மேலும் தமிழகத்தில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து, வேலூர் மக்களவைத் தேர்தலையொட்டி, சபாநாயகர் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரைதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
newstm.in

No comments:
Post a Comment