
காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள ராகுல்காந்தி, டிவிட்டர் பக்கத்திலும் அப்பதவியைத் துறந்துள்ளார்.
இதற்கு முன்பு ராகுல் காந்தியின் டிவிட்டர் பக்கத்தில் (https://twitter.com/RahulGandhi?lang=en) ராகுல் காந்தி, தலைவர், இந்திய தேசிய காங்கிரஸ் என்று இடம் பெற்றிருந்தது. தற்போது அதை நீக்கி விட்டார் ராகுல்.
அதற்குப் பதிலாக, ராகுல் காந்தி, இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினர், மக்களவை உறுப்பினர் என்று மட்டும் உள்ளது. தலைவர் பதவியை டிவிட்டரிலும் அவர் துறந்துள்ளது காங்கிரஸ் தொண்டர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
2017ம் ஆண்டு தனது தாயாரிடமிருந்து தலைவர் பதவியைப் பெற்றார் ராகுல் காந்தி.ஆனால் மே மாதம் நடந்த லோக்சபா தேர்தலில் வெறும் 52 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது அவருக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி விட்டது. இதையடுத்து தனது தலைவர் பதவியை அவர் உதறியுள்ளார்.
அவரது ராஜினாமா குறித்து இத்தனை நாட்களாக பெரிதாக விவாதிக்கப்படவில்லை. ஆனால் இன்று மிக நீண்ட கடிதம் ஒன்றை வெளியிட்டு தனது ராஜினாமாவை உறுதிப்படுத்தி விட்டார் ராகுல் காந்தி. இதனால் இடைக்காலத் தலைவராக மோதிலால் வோரா நியமிக்கப்படவுள்ளார் என்று தகவல்கள் கூறுகின்றன.
தலைவர் பதவியிலிருந்து விலகிய கையோடு டிவிட்டர் பக்கத்திலும் அவர் பதவியை நீக்கி விட்டார்.
source: oneindia.com

No comments:
Post a Comment