புதுடில்லி:விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடை மேலும் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
விடுதலை
புலிகள் அமைப்பு மீது விதிக்கப்பட்ட தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு
நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் தனி
ஈழம் கேட்டு போராடியது விடுதலை புலிகள் அமைப்பு. இந்த அமைப்பு, இந்தியா,
ஐரோப்பிய யூனியன் இலங்கை போன்ற நாடுகளால் பயங்கரவாத அமைப்பாக அறிவித்து
தடையும் விதித்தது.
குறிப்பாக
இந்தியா, தமிழகத்தில் இதன் ஆதரவு அமைப்புகள் பெருக விடாமல் தடுக்க கடும்
நடவடிக்கைள் எடுக்கப்பட்டன. ஏற்கனவே இருக்கும் இந்த தடை இப்போது மேலும் 5
ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அரசின் இந்த
உத்தரவில், தமிழகத்தில் விடுதலை புலிகள் ஆதரவை பெருக்க முயற்சிகள்
நடக்கின்றன. விடுதலைப் புலிகள் ஆதரவு இயக்கங்கள் தனி ஈழம் அமைப்பதற்கான
முயற்சியை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன. இதனால் வரும் 2024-ஆம் ஆண்டு
வரை ஊபா (Unlawful Activities (Prevention) Act- UAPA) சட்டத்தின் கீழ்
விடுதலை புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment