மியான்மர் தேசிய ஏர்லைன்ஸிற்கு சொந்தமான எம்பரர் 190 ரக விமானம்
நேற்று காலை 9 மணியளவில் மான்டலே என்ற நகரில் முன் சக்கரம் இல்லாமல்
தரையிறக்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் எதுவும் நிகழவில்லை,
சக்கரம் இல்லாமல் விமானம் தரையிறங்கிய பதிவு சமூகவலைத்தளங்களில் வைரல்
ஆகிவருகிறது.
எம்பரர் 190 என்ற இந்த விமானம் தரையிறங்கும் போது,
விமானத்தின் முன் பகுதியில் உள்ள சக்கரம் வெளியே வரவில்லை. விமானம்
கிட்டத்தட்டத் தரையிறங்கவுள்ள நிலையில் மீண்டும் விமானத்தை மேலே பறக்க
வைக்க முடியாது என்ற காரணத்தினால் வேறு வழியில்லாமல் விமானத்தை முன் பக்க
சக்கரம் இல்லாமலேயே தரையிறக்க விமானி முயன்றுள்ளார்.
விமான ஓடுதளத்தில் சக்கரம் இல்லாமல் தீப்பொறி பறக்க எம்பரர் 190 விமானம் தரையிறக்கப்பட்டது.
பொதுவாக விமானத்தில் சிறிதாகத் தீப்பிடித்தாலே முழு
விமானமும் எரித்துவிடும். ஆனால் அதிர்ஷ்டவசமாக அப்படி எந்தவொரு
அசம்பாவிதமும் நிகழவில்லை.
சக்கரம் இல்லாமல் தீப்பொறியுடன்
தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருந்த 82 பயணிகள் மற்றும் 7 விமான ஊழியர்களை
உடனே பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம் செய்து பெரும் விபத்தைத்
தவிர்த்துள்ளனர். சக்கரம் இல்லாமல் வெற்றிகரமாகத் தரையிறங்கிய விமானத்தின்
பதிவு தற்பொழுது வைரல் ஆகிவருகிறது.
source: gizbot.com
No comments:
Post a Comment