
1. வெள்ளரிக்காயை சிறுசிறு துண்டுகளாக வெட்டி, ஒரு பாத்திரத்தில்
போட்டு மோர் ஊற்றி அதில் இஞ்சி, கொத்தமல்லி, வெட்டிவேர் மணக்கப்போட்டு மதிய
வேளை வெயிலில் 2 டம்ப்ளர் குடித்து பாருங்கள். உடல் குளுகுளுவென
இருக்கும். கோடை வெப்பத்தால் சிறுநீரகம் பாதிக்கப்படாமல் பாதுகாப்பாக
இருக்க வெள்ளரிக்காயிலுள்ள பொட்டாசிய உப்பு உதவுகிறது.
2. இளநீரில்
சிறிதளவு உப்பு, எலுமிச்சை சாறு கலந்து அதனுடன் புதினா இலையை நறுக்கி
போட்டு இதனை பிரிட்ஜில் வைத்து குளிர்ந்ததும் எடுத்து குடித்து பாருங்கள்.
குற்றால அருவியில் குளித்தது போல் இருக்கும்.
3.
திராட்சை சாறு கோடையில் ஏற்படும் களைப்பை நீக்கி சக்தியை தருகிறது. இது
கோடை வெயிலால் ஏற்படும் உடற்சூடு, நீர்க்கடுப்பு மற்றும் ஜீரண
கோளாறுகளுக்கு அருமருந்து.
4. இளசான நுங்குகளை துண்டுகளாக்கி பால் சேர்த்து ஏலக்காய், சர்க்கரை கலந்து பிரிட்ஜில் வைத்து குளிர செய்து பருகலாம்.
5.
இரண்டு மூன்று பழச்சாறுகள் கலந்து ஜூஸ் செய்யும்போது, அதனுடன் 2 ஸ்பூன்
இஞ்சிச்சாறு கலந்து பருகுங்கள். இதன் சுவை சூப்பராக இருக்கும்.
No comments:
Post a Comment