
சிதம்பரம்: "ஏன்.. எங்க கட்சியிலே யாருமே தொழில் அதிபர்கள் இருக்கக்
கூடாதா? ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் எவரிடமாவது இதுவரை சோதனை
நடந்திருக்கிறதா?" என்று திருமாவளவன் கேள்வி மேல் கேள்வி எழுப்பி உள்ளார்.
சமீபத்தில்
விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உள்ளிட்ட 4
பேரிடமிருந்து ஒரு காரில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தேர்தல்
பட்டுவாடாவுக்காக கொண்டு செல்லப்பட்ட பணமா என்பது குறித்து அதிகாரிகள்
விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில், இதுகுறித்து,
அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பரங்கிப்பேட்டையில் செய்தியாளர்களிடம்
பேசினார். அப்போது அவர் சொன்னதாவது:
சிதம்பரம் தொகுதியில் என்னை தோற்கடிக்க பெரிய சதித்திட்டமே தீட்டுகிறார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் யாரும்
பாராளுமன்றத்துக்குள் நுழையக் கூடாது என்பதுதான் பாஜகவின் கணக்கு.
அதனால்தான் என்னை அதிமுக-பாஜகவும் சிதம்பரம் தொகுதியில் ரூ.40 கோடி செலவு
செய்ய திட்டம் தீட்டி இருக்கிறார்கள்.
இதற்கு என்ன காரணம் என்றால்,
இந்த கட்சிகளை எதிர்த்து பேசிவருகிறேன். மேலும் மதவாதத்தை எதிர்த்து
பேசுகிறேன் என்பதற்காகத்தான். இப்படி எதையும் கண்டித்து நான் பேசுவதால்தான்
ஆத்திரம் அதிகமாகி, என்னை தோற்கடிக்க பணத்தை உள்ளே இறக்கி வருகிறார்கள்.
திருச்சியை
சேர்ந்த என் கட்சி சேர்ந்த ஒரு தொழிலதிபர் அவர் தொழிலுக்காக பணத்தை
வைத்திருந்தார். அவரது காரை சோதனை போட்டு, வைத்திருந்த பணத்தை பறிமுதல்
செய்துவிட்டு, அந்த விவகாரத்தை தேர்தலோடு கொண்டு வந்து முடிச்சு
போடுகிறார்கள்.
ஏன், எங்க கட்சியில் தொழில் அதிபர்களே இருக்கக்
கூடாதா? ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் யாரிடமிருந்து இது வரைக்கும் சோதனை
நடந்திருக்கிறதா? எங்க மேல எவ்வளவு குற்றங்களை, பழிகளை சுமத்தினாலும் சரி,
நாங்கள் வெற்றி பெறுவது உறுதி" என்கிறார்.
source: oneindia.com
No comments:
Post a Comment