கோடையில் வெயில் அதிகமாக இருக்கும் போது மண்பானைக்குள் உள்ள,
தண்ணீர் அதிக அளவில் குளிர்ச்சியாக இருக்கும். வெயில் குறைவாக
இருக்கும்போது மண்பானையில் உள்ள தண்ணீரும் குறைந்த அளவே குளிர்ச்சியாக
இருக்கும். இதற்கு காரணம் என்னவென்றால்,
மண்பானையினுள் ஏராளமான நுண்துளைகள் இருக்கிறது. இந்த நுண்துளைவழியாக மண்பானையில் இருக்கும் நீர்த்திவலைகள் வியர்த்ததுபோல கசிவதை பார்க்கலாம்.
மண்பானையினுள் ஏராளமான நுண்துளைகள் இருக்கிறது. இந்த நுண்துளைவழியாக மண்பானையில் இருக்கும் நீர்த்திவலைகள் வியர்த்ததுபோல கசிவதை பார்க்கலாம்.
பானையிலிருந்து
இவ்வாறு வெளியே வரும் தண்ணீர் தொடர்ந்து ஆவியாகிக்கொண்டே இருக்கும். இதன்
காரணமாக பானையின் வெப்பமும், தண்ணீரின் வெப்பமும் தொடர்ந்து ஆவியாகும்.
இப்படி ஆவியாதல் மூலம் வெப்பம் வெளியேற்றப்படுவதால் பானைக்குள் உள்ள
தண்ணீர் கோடை காலத்தில் ரொம்ப குளிர்ச்சியாக மாறிவிடுகிறது.
பனிக்காலத்தில் பானை தண்ணீர் குறைந்த அளவே
குளிர்ச்சியடையும். இதற்கு காரணம் பனிக்காலத்தில் காற்றில் 'ஈரப்பதம்'
அதிகம் இருப்பதால் எப்போதும் காற்று ஜில்லென்று வீசி கொண்டே இருக்கும்.
இதனால் பானையில் இருக்கும் நீர் ஆவியாவது குறைந்து தண்ணீர் குறைந்த அளவே
குளிர்ச்சியாக இருக்கும்.
கோடை வெயிலில் சிறிது தூரம் நடந்தாலே
வியர்த்து கொட்டுகிறது. வியர்வை அதிகம் வெளியேறுவதால் ஏற்படும் தாகத்தை
தணிக்க இளநீர், குளிர்பானம் என பல இருந்தாலும் சுத்தமான இந்த மண்பானை
குடிநீருக்கு நிகரே கிடையாது.
ஒரு மண்பானை எந்த அளவுக்கு நீரை
குளிர்விக்கும் என்று பார்த்தல், அறை வெப்ப நிலையைவிட வெறும் 5 டிகிரி
செல்சியஸ் குறையும் அளவுக்கு தான் குளிர்விக்கும். வெளிப்புறத்தில் வெப்பம்
30 டிகிரி செல்சியஸ் என்றால் மண்பானையில் உள்ள நீரின் வெப்பநிலை 25 டிகிரி
செல்ஸியஸ் அளவுக்கு இருக்கும்.
குளிர்சாதன பெட்டியில்
வைத்திருக்கும் தண்ணீரைவிட மண்பானையில் வைத்திருக்கும் நீரை விரும்பி
அருந்துபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே கொண்டே வருகிறது. தண்ணீரை
மண்பானையில் வைத்து குடித்தால் கெட்ட பொருள்களும் அழியும். மண் சக்தியும்
கிடைக்கும், பிராண சக்தியும் கிடைக்கும்.

No comments:
Post a Comment