தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் போது
அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யவும், நியமிக்கவும் தேர்தல் ஆணையத்துக்கு
அதிகாரம் உள்ளது என்று மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு இணை தேர்தல் ஆணையர் ஒருவர் எழுதியுள்ள பதில் கடிதத்தில்,
"தேர்தல்
நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் போது அதிகாரிகளை பணியிட மாற்றம்
செய்யவும், நியமிக்கவும் தேர்தல் ஆணையத்துக்கு மக்கள் பிரதிநிதித்துவ
சட்டத்தின் பிரிவு 28A வழிவகுக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறை அமலில்
இருக்கும் சமயத்திற்காக இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட்டதை, மத்தியில்
ஆட்சியில் இருக்கும் கட்சியின் கட்டளையின்படி நியாயமற்ற முறையில்
செயல்படுகிறது என்று குறிப்பிடுவது துரதிருஷ்டவசமானது.
மேற்கு வங்க மாநிலத்தில் தேர்தல்
நடைமுறைகளை கண்காணித்து வரும் இணை தேர்தல் ஆணையரின் அறிவுறுத்தலின்படி தான்
அந்த 4 காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்" என்று
குறிப்பிடப்பட்டிருந்து.
முன்னதாக,
முன்னதாக,
மக்களவைத்
தேர்தலையொட்டி, மேற்கு வங்கத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு
மற்றும் காவல்துறை அதிகாரிகள் 51 பேர், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு
ஆதரவாகச் செயல்படுவதாக தோதல் ஆணையத்திடம் பாஜக புகார் அளித்துள்ள நிலையில்,
அந்த மாநில காவல்துறை அதிகாரிகள் நால்வரை தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை
பணியிட மாற்றம் செய்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இதுகுறித்து அவர் தேர்தல்
ஆணையத்திற்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில்,
"4
காவல்துறை அதிகாரிகளை தோதல் ஆணையம் பணியிட மாற்றம் செய்துள்ளது. பாஜகவுக்கு
சாதகமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உள்நோக்கம் கொண்டது. ஒரு
தலைபட்சமானது.
சமீபகாலமாக தேர்தல் ஆணையத்தின்
நடவடிக்கைகள், தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த
அரசியலமைப்புபடி செயல்படுகிறதா அல்லது மத்தியில் பா.ஜ.,வை சமாதானபடுத்தும்
வகையில் இருக்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சட்டம் ஒழுங்கு மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரும். மாற்றம் செய்யப்பட்ட இடத்திற்கு வரும் புதிய அதிகாரிகள் அந்த இடங்களுக்கு புதியவர்கள். அவர்கள், வாக்காளர்களை கவர பணம், சாராயம் விநியோகம் செய்வதை தடுப்பதில் சிக்கல் ஏற்படும்" என்றார்.
சட்டம் ஒழுங்கு மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரும். மாற்றம் செய்யப்பட்ட இடத்திற்கு வரும் புதிய அதிகாரிகள் அந்த இடங்களுக்கு புதியவர்கள். அவர்கள், வாக்காளர்களை கவர பணம், சாராயம் விநியோகம் செய்வதை தடுப்பதில் சிக்கல் ஏற்படும்" என்றார்.

No comments:
Post a Comment