ஏர்டெல் நிறுவன சேவையை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.248
விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே வழங்கப்பட்டு
வந்த ரூ.229 சலுகைக்கு மாற்றாக அறிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
தற்சமயம்
ஏர்டெல் சேவையை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.76, ரூ.179,
ரூ.248 மற்றும் ரூ.495 விலையில் சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த
சலுகைகளில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 100 எஸ்.எம்.எஸ்.
வழங்கப்படுகிறது. ரூ.229 சலுகைக்கு மாற்றாக அறிவிக்கப்பட்டிருக்கும் ரூ.248
சலுகையில் தினமும் 1.4 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.
தினசரி
டேட்டாவுடன் அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் அழைப்புகள், ரோமிங் வாய்ஸ்
கால் மற்றும் தினமும் 100 எஸ்.எம்.எஸ்.
உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ.248 சலுகையை போன்று ரூ.495 விலையில் சலுகையை ஏர்டெல் வழங்குகிறது.
ரூ.495
சலுகையில் தினமும் 1.4 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மற்றும்
100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன்
ரூ.76 விலையிலும் ஏர்டெல் சலுகை கிடைக்கிறது. இச்சலுகையில் பயனர்களுக்கு
100 எம்.பி. டேட்டா, அழைப்புகள் நிமிடத்திற்கு 60 பைசா கட்டணத்தில் 28
நாட்கள் வழங்கப்படுகிறது.
இதுமட்டுமின்றி ரூ.178 விலையிலும் ஏர்டெல்
சலுகை வழங்கப்படுகிறது. இதில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ்
கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் 1 ஜி.பி. டேட்டா உள்ளிட்டவை 28
நாட்களுக்கு வழங்கப்படுகிறது. மேலே கொடுக்கப்பட்டிருக்கும் சலுகைகள் முதல்
முறை ஏர்டெல் பிரீபெயிட் சேவையில் இணையும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே
பொருந்தும்.

No comments:
Post a Comment