
தாய்லாந்து நாட்டின் தலைநகரம் பாங்காங். இதன் மையப்பகுதியில்
அமைந்துள்ளது பாங்காங் சென்ட்ரல் வேர்ல்டு ஷாப்பிங் மால். இந்த ஷாப்பிங்
மாலில் இன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மாலின் 8வது மாடியில்
ஏற்பட்ட தீ மளமளவென பரவியது.
தகவலறிந்து
சம்பவ இடத்துக்கு தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும்
பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 7 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள
மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தீ விபத்துக்கான காரணம்
குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

No comments:
Post a Comment