ஜெகார்த்தா:
இந்தோனேசியாவில் தற்போது பலத்த மழை பெய்து
வருகிறது. இதனால் நாடு முழுவதும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில், இந்தோனேசியாவின் கலிமந்தன் மாகாணத்தில் இன்று நிலச்சரிவு
ஏற்பட்டது.
அந்த மாகாணத்தில்
அமைந்துள்ள சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கு வேலை பார்த்த
ஊழியர்கள் சிக்கினர். இந்த நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகினர். மேலும் 2
பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து அங்கு
மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது என்று பேரிடர் மேலாண்மை குழுவின்
அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment