தைபே:
நம்மை சுற்றி இருக்கும் பகுதிகளில் தூரமாகவே தேனீக்கள்
பறந்தாலும் அச்சம் வராமல் இருந்ததில்லை. இந்நிலையில் தைவானில் ஹீ(29)
எனும் பெண் கடந்த வாரம் தனது உறவினரின் கல்லறைக்கு சுத்தம் செய்வதற்காக
சென்றுள்ளார். பணி முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் போது கண்களில்
அரிப்பு மற்றும் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கைகளை
கொண்டு வழக்கம்போல கண்களை கசக்கியுள்ளார். தொடர்ந்து வலி ஏற்படவே கண்களை
கழுவியுள்ளார். மறுநாள் அருகிலுள்ள மருத்துவமனை மருத்துவரை அணுகினார்.
அப்போது தான் அவருக்கு அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது.
இது குறித்து டாக்டர் கூறுகையில், 'கண்களில் ஏதோ பூச்சியின் கால்கள் இருப்பது போல் இருந்தது.
மைக்ரோஸ்கோப் மூலம் எடுத்துவிடலாம் என பார்த்தேன்.
அப்போது 4 தேனீக்கள் உள்ளே இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். பின்னர்
மெதுவாக அவரது கருவிழிகளுக்கு எவ்வித பாதிப்புமின்றி தேனீக்களை எடுத்தேன்.
அவை உயிருடன் இருந்தன. இவை வியர்வை தேனீக்கள் ஆகும்' என கூறினார்.

No comments:
Post a Comment