Latest News

தஞ்சையில் 100 சதவீத ஓட்டுப்பதிவுக்கு வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு பணி

தஞ்சாவூர்:
வரும் தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவு இருக்க வேண்டும் என்பதற்காக தஞ்சையில் நகராட்சி அதிகாரிகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் மற்றும் காலியாக உள்ள 18 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 18ம் தேதி நடக்கிறது. தேர்தலில் முழுமையாக 100 சதவீதம் வாக்குகள் பதிவு நடக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தஞ்சையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கலெக்டர் அண்ணாதுரை அவர்களின் அறிவுரையின் படி மாநகராட்சி ஆணையாளர் (ம) தனி அலுவலர் ஜானகி ரவீந்திரன் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் பொதுமக்கள் அனைவரும் ஓட்டு போடுவதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்து வருகின்றனர். 
 
அதன்படி கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின் போது 60 சதவீதத்திற்கும் குறைவாக வாக்குப்பதிவு நிகழ்ந்த தஞ்சை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 100 சதவீதம் நேர்மையாகவும், உண்மையாகவும் வாக்களித்திட வலியுறுத்தி பல்வேறு இடங்களில் கூடுதல் விழிப்புணர்வு பணி மேற்கொள்ளப்பட்டது.

அப்போது பாகம் எண்: 198 வாக்குச்சாவடிக்கு உட்பட்ட புதிய வீட்டு வசதி வாரியம் பகுதிகளில் மாநகராட்சி உதவிப் பொறியாளர் ரெ.சந்திரபோஸ் மற்றும் துப்புரவு ஆய்வாளர், வாக்குச்சாவடி நிலை அலுவலர் செல்வமணி ஆகியோர் முன்னிலையில் விழிப்புணர்வு பணி மேற்கொள்ளப்பட்டது.

இதேபோல் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக விழிப்புணர்வு பணி வாக்காளர்களிடம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.