நீட் தேர்வை நிச்சயம் காங்கிரஸ் ரத்து செய்யும்; குஷ்பு பேட்டி!! பெங்களூரு :
2019 நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மற்றும் தமிழக சட்டசபை இடைத்தேர்தலை
அடுத்து அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
தமிழகத்தில் வருகிற 18ந்தேதி தேர்தல் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை 23ந்தேதி
நடைபெறும். கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பிரசாரத்துக்கு
வந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு
செய்தியாளர்களுக்கு இன்று அளித்த பேட்டியில், காங்கிரஸ் கட்சி செய்ய
முடிவதை தான் தேர்தல் வாக்குறுதியாக அளிக்கும். இதற்கு முன்பு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டம் சாத்தியமா?
என கேள்வி எழுப்பியவர்கள், தற்போது நியாய் திட்டம் குறித்து கேள்வி எழுப்புவதாக பா.ஜ.க.வை சாடியுள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் நிலையில், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற வாக்குறுதி நிறைவேறும் என்றும் அவர் கூறினார்.

No comments:
Post a Comment