Latest News

ஹாட் பாக்ஸில் வைத்து வெளிநாட்டிற்கு கடத்தவிருந்த 490 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்

சென்னையில் இருந்து பாங்காக்கிற்கு கடத்த முயன்ற 490 அரிய வகை நட்சத்திர ஆமைகளை பறிமுதல் செய்து, வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

சென்னை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வந்தனர். இதில் சென்னையைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் வைத்திருந்த உடமைகளை பரிசோதனை செய்ததில் ஹாட் பாக்ஸில் அரிய வகை நட்சத்திர ஆமைகள் மறைத்திருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து ஹெட் பாக்ஸில் இருந்த 490 நட்சத்திர ஆமைகளையும் பறிமுதல் சுங்கத்துறை அதிகாரிகள் அந்த நபரிடம்.விசாரணையில், அவை பாங்காக்கிற்கு கடத்த முயன்றது தெரியவந்தது. 

இதைத் தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள், அவரை கைது செய்தனர். இக்கடத்தலில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.