பெங்களூர்: நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் நடிகர்
பிரகாஷ் ராஜுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் தேர்தல் விதிமுறை மீறல் புகார்
அளிக்கப்பட்டுள்ளது .
நாடாளுமன்ற தேர்தல் களம் கொஞ்சம் கொஞ்சமாக சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. வரும் ஏப்ரல் 11ம் தேதி லோக்சபா தேர்தல் தொடங்க இருக்கிறது.
இந்த தேர்தலில் போட்டியிட போவதாக பிரகாஷ்ராஜ் ஏற்கனவே அறிவித்து இருந்தார். சுயேட்சையாக தேர்தலில் போட்டியிடுகிறார்.
எங்கு
என்ன சொன்னார்
என்ன சொன்னார்
பிரகாஷ்ராஜ், இந்த வருடம் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போகிறேன்.
மக்களின் ஆட்சி இனி அமையும் ''ஆப்கி பார் ஜனதா
சர்க்கார்''. நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பேன், என்று குறிப்பிட்டு
இருந்தார். இந்த நிலையில் அவர் மத்திய பெங்களூர் தொகுதியில் போட்டியிடுவதாக
அறிவித்துள்ளார்.
இன்று தாக்கல்
இன்று அவர் தனது வேட்புமனுவை தாக்கல்
செய்தார். இன்று காலை அவர் வேட்புமனுவை தாக்கல்செய்தார். சமூக
செயற்பாட்டாளர்கள், ஆம் ஆத்மி கட்சியினர் இவர் வேட்புமனு தாக்கல் செய்யும்
போது இவருடன் உடன் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கு
புகார்
இந்த நிலையில் இவர்மீது தேர்தல் ஆணையத்தில்
புகார் அளிக்கப்பட்டுள்ளது. இவர் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தேர்தல்
கட்டுப்பாட்டு அதிகாரி டி மூர்த்தி புகார் அளித்துள்ளார். கடந்த மார்ச்
12ம் தேதி பெங்களூர் எம்.ஜி சாலையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில்
பிரகாஷ்ராஜ் பிரச்சாரம் செய்தார்.
இல்லை
ஏன் புகார்
ஆனால் இது அரசியல் சாராத பொதுக்கூட்டம்
ஆகும். அதன் பெயரிலேயே இதற்கு அனுமதி வாங்கப்பட்டு இருக்கிறது. அதனால்
இதில் அனுமதியை மீறி பிரகாஷ்ராஜ் பிரச்சாரம் செய்தது தவறு என்று தற்போது
தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. தேர்தல் ஆணையம் இந்த
புகாரை விரைவில் விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
source: oneindia.com

No comments:
Post a Comment