Latest News

தேர்தல் : முதல் நாளில் தாக்கலான வேட்பு மனுக்கள் இவ்வளவு தான்!

மக்களவைத் தேர்தலில் போட்டியிட, தமிழகம் முழுவதும் இன்று 20 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி, ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.
முதல் நாளான இன்று தமிழகம் முழுவதும் 20 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதில், அதிகபட்சமாக வடசென்னை தொகுதியில் 4 பேரும் , தென்சென்னை தொகுதியில் 3 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இதேபோன்று, சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கு 2 பேர் மட்டுமே இன்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

நாளை பெளர்ணமி தினம் என்பதால், நாளை அதிக எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய மார்ச் 26 -ஆம் தேதி கடைசி நாளாகும். அதன் பிறகு, இறுதி வேட்பாளர் பட்டியல் மார்ச் 29 -ஆம் தேதி வெளியிடப்படும்.
newstm.in

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.