
திமுகவிலிருந்து மனித நேய மக்கள் கட்சி விலக போகிறதா என்ற சந்தேகம்
பலமாக எழுந்துள்ளது.
மறைந்த கருணாநிதி மீது அதீத பற்று கொண்டவர்கள் இந்திய யூனியன் முஸ்லீம்
கட்சி தலைவர் காதர் மொய்தீன் மற்றும் மனித நேய மக்கள் கட்சி தலைவர்
ஜவாஹிருல்லா!
இதில் கொஞ்சம் சீனியாரிட்டியுடன் உள்ளது இந்திய யூனியன் முஸ்லீம் லீக்.
திமுக கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்பமானபோதே இக்கட்சி படு சுறுசுறுப்பாக
பேச்சுவார்த்தையில் இறங்கியதையும், மனித நேய மக்கள் கட்சி மந்தமாக
செயல்பட்டு வருவதையும் கடந்த பிப்ரவரி 13 அன்று "ஒன் இந்தியா தமிழ்"
அறுதியிட்டு சொல்லி இருந்தது.
கருணாநிதி பாணி
இதனால் அக்கட்சிக்கு திமுக கூட்டணியில் இடம் கிடைக்காது என்று பலமாகவே
அன்று சொன்னது, இன்று நிரூபணமாகி உள்ளது. இப்போது தங்களுக்கு ஆதரவு தருவதாக
இருந்தால் வரும் சட்டமன்ற தேர்தலில் இடம் ஒதுக்குவோம் அதாவது மனசில்
எப்போதும் அவர்களுக்கு இடம் உண்டு கருணாநிதி பாணியில் ஸ்டாலின்
தெரிவித்துவிட்டார்.

ஆபரேஷன்
ஆனால் எதற்காக மனித நேய மக்கள் கட்சிக்கு இடம் ஒதுக்கப்படவில்லை? ஏன் அந்த
கட்சி திமுகவில் அங்கம் வகிக்க ஆர்வம் காட்டவில்லை? என்ற கேள்வி
எழுந்துள்ளது. ஒரு பக்கம் பேராசிரியர் ஜவாஹிருல்லாவுக்கு உடல்நலம்
சரியில்லை என்று சொல்லப்படுகிறது. மூட்டு மாற்று ஆபரேஷன் செய்ததில் இருந்து
அவரால் முன்பு போல் நடக்க முடியவில்லை என்பதால் தயக்கம் காட்டுகிறாராம்.

தமீமுன் அன்சாரி
ஆனால் இன்னொரு பக்கம், தமீமும் அன்சாரி திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு
தெரிவித்துள்ளாராம். இதனால்தான் ஜவாஹிருல்லா அதிருப்தி அடைந்ததாக
தெரிகிறது. தமீமுன் அன்சாரி ஏற்கனவே ஜவாஹிருல்லாவுடன் இருந்து, பிறகு
கருத்து வேறுபாடு காரணமாக வெளியே வந்து, தனிக்கட்சி தொடங்கியவர்.

தனிக்கட்சி
ஜெயலலிதா அவரை அரவணைத்து தனது கூட்டணியிலேயே இரட்டை இலை சின்னத்தில்
போட்டியிட வைத்தவர். ஆனால் இன்று அதிமுக-பாஜக கூட்டணி பிடிக்காத
காரணத்தினால், திமுக பக்கம் தமீமுன் அன்சாரி வந்துள்ளதாக தெரிகிறது. இதற்கு
திமுகவும் எந்தவித எதிர்ப்பையும் சொல்லாமல் இருந்திருக்கிறது. இதனால்
ஜவாஹிருல்லா கூட்டணி, மற்றும் தொகுதி பங்கீட்டில் பெரிதாக ஆர்வம்
காட்டவில்லை என சொல்லப்படுகிறது.

அமமுகவில் இணைகிறதா?
இப்போது ஒரு தொகுதியும் ஒதுக்கப்படாத நிலையில், திமுகவிலிருந்து மனித நேய
மக்கள் கட்சி விலகவும் வாய்ப்புள்ளதாகவும், அப்படி விலகினால் டிடிவி
தினகரனின் அமமுகவில் சேர்ந்து கூட்டணி வைக்கலாம் என்றும் தகவல்கள் கசிய
ஆரம்பித்துள்ளன.
No comments:
Post a Comment