
தினந்தோறும் தோல்வி.. அதான் பயத்தில் டிடிவி தினகரன் என்னவெல்லாமோ
பேசிக் கொண்டிருக்கிறார்" என்று சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி
என்.நடராஜன் தெரிவித்துள்ளார். .
மணப்பாறை ஒன்றியம், தொப்பம்பட்டி ஊராட்சியிலுள்ள கரும்புளிப்பட்டி அரசு
உயர்நிலைப் பள்ளிக்கு, ரூ.46 லட்சத்தில் 4 வகுப்பறைகள் கொண்ட கட்டடத்தை
அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்
நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி
வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்,
"முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா வழியில் தொலைநோக்கு பார்வையுடன்
சீரிய முறையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற திறமைக்கு உரியது. தற்போது
நாங்கள் கூட்டணி கட்சி தலைவர்கள் இணைந்து செயல்பட்டு 40 தொகுதிகளிலும்
வெற்றி பெறுவோம்.
தினந்தோறும் தோல்வியைச் சந்தித்து வரும் தினகரன், தோல்வி பயத்தில்
என்னவெல்லாமோ பேசிக் கொண்டிருக்கிறார். யார் முதல் இடத்தை தக்க வைக்கப்
போகிறார்கள் என்பதை விரைவில் அவர் புரிந்து கொள்வார்" என்றார்.
No comments:
Post a Comment