
தேனி அருகே சின்னமனூர் மார்க்கையன் கோட்டை பகுதியை சேர்ந்தவர் பால
கிருஷ்ணன் மகள் மோனிகா (வயது 16). தந்தை இறந்து விட்டதால் தாய்
லெட்சுமியின் பராமரிப்பில் இருந்து வருகிறார். சம்பவத்தன்று அருகில் உள்ள
உறவினர் வீட்டுக்கு தூங்குவதற்காக சென்றார். வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த
மோனிகா திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள்
அக்கம் பக்கத்தில் தேடினர். ஆனால் அவர் கிடைக்க வில்லை.
எனவே
மோனிகாவின் தாயாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் எங்கு தேடியும்
கிடைக்காததால் சின்னமனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த
புகாரில் குமரேசன் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து போலீசார் வழக்குபதிவு மோனிகாவை தேடி வருகின்றனர்.

No comments:
Post a Comment