
மதுரை மகாலட்சுமி நகர் ரயில்வே தண்டவாளம் அருகே வெடிகுண்டு வெடித்த
சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மகாலட்சுமி நகர் பின்புறம் மதுரை பழனி அகல ரயில் பாதை அமைக்கும் பணி
நடைபெற்று வருகிறது. இன்று காலை 9.15 மணியளவில் தண்டவாளத்தில் இருந்து 10
அடி தூரத்தில் பயங்கர வெடி ஒன்று வெடித்து சிதறியது.
ஆள் நடமாட்டம் கொண்ட அந்த பகுதியில் வெடித்து சிதறி அந்த வெளியிலிருந்து
சிதறிய செங்கற்கள் அப் பகுதியில் நடமாடிக் கொண்டு இருந்தவர்கள் மற்றும்
விறகு சேகரித்து கொண்டவர்களின் மீது விழுந்தது. சிறிது நேரத்தில்
அப்பகுதியே புகை மண்டலமாக மாறி அதைத்தொடர்ந்து அப்பகுதியில் மக்கள்
திரண்டனர்.

வெடி பொருள்
வெடித்த பொருள் 100 கிராம் எடை கொண்டது என்பது முதற்கட்ட விசாரணையில்
தெரியவந்துள்ளது நிலையில், அது நாட்டு வெடிகுண்டு அல்லது வெடிகுண்டா என்பது
குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு
வந்த தென் மண்டல ஐஜி சண்முக ராஜேஸ்வரன் அங்கு போலீசாருடன் இணைந்து
விசாரணையில் ஈடுபட்டார்.

ஐஜி விசாரணை
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் மற்றும் சேகரிக்கப்பட்ட வெடிபொருட்கள்
குறித்து ஆய்வு நடத்தி அவர் அதன் பின்பாக செய்தியாளர்களிடம்
பேசுகையில்,'கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் குறித்து ஆய்வு செய்து
வருவதாகவும் இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு
உள்ளதாகவும் தெரிவித்தார். வெடிகுண்டு வெடித்த சம்பவமானது ரயில்வே
தண்டவாளம் அருகே நடந்த சம்பவம் என்பதால் இந்த விசாரணையில் ரயில்வே
போலீசாரும் இணைந்துள்ளனர்.
செல்லூர் ராஜு நிகழ்ச்சிக்கு அருகே
இதைத்தொடர்ந்து வெடிகுண்டு விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து சரியாக 500
மீட்டர் தொலைவில் தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர்கள்
தலைமையில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட புதிதாக அமைக்கப்பட்ட மதுரையின்
வரலாற்று சின்னங்களை உள்ளடக்கிய ரவுண்டானா, அரசின் நூலகம் ஆழ்துளைக்கிணறு
உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும்
நடைபெற்றுக் கொண்டிருந்தது.
உள்நோக்கம் இருக்கா
எனவே அரசியல் உள்நோக்கம் ஏதேனும் இருக்கிறதா அல்லது அச்சுறுத்தல் ஏற்படுத்த
வேண்டும் என்ற எண்ணத்தில் யாரேனும் மர்ம நபர்கள் செய்து இருக்கிறார்களா
என்ற கோணத்தில் காவல்துறையினரும் ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை
நடத்தி வருகின்றனர் இந்த சம்பவத்தினால் அதிமுகவினர் இடையே சலசலப்பு
ஏற்பட்டது.

No comments:
Post a Comment