Latest News

நாகரீக வரம்புகளை மீறாமல் விமர்சனம் செய்யுங்கள்… திருமாவளவன் ஆதங்கம்

 Tamil Nadu politics travel in Indecency direction SaysThirumavalavan
தமிழக அரசியல் அநாகரீக திசையில் பயணிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார். சென்னை அம்பத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில் சனாதன எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது.

இந்த விழாவில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அயோத்தி பிரச்சினைக்கு தீர்வு காணும் குழுவில் இருதரப்பு நலன்களை சிந்திக்கக் கூடியவர்கள் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். பிரேமலதா விஜயகாந்த் பேசியது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த திருமாவளவன், தமிழக அரசியல் அநாகரீக பாதையில் பயணிப்பதாக வேதனை தெரிவித்தார். தனிநபர் விமர்சனங்கள் உண்மையிலேயே உள்ளபடி அதிர்ச்சியை தருவதாக தெரிவித்த அவர், நாகரீக வரம்புகளை மீறாமல் விமர்சனங்களை முன் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.