Latest News

10-வது தேர்ச்சியா? சென்னை மாநகராட்சியில் வேலை வாய்ப்பு..!

 10-வது தேர்ச்சியா? சென்னை மாநகராட்சியில் வேலை வாய்ப்பு..!
சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் "காசநோய் இல்லா சென்னை'' திட்டத்தில் காலியாக உள்ள எக்ஸ்ரே டெக்னீசியன் பணியிடங்களை நிரப்பிட ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்கு 10 மற்றும் 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 15 ஆம் தேதி நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

நிர்வாகம் : சென்னை மாநகராட்சி மேலாண்மை : தமிழக அரசு பணி : எக்ஸ்-ரே தொழில்நுட்ப வல்லுநர் மொத்த காலிப் பணியிடங்கள் : 03 கல்வித் தகுதி : 10 மற்றும் 12வது அல்லது மருத்துவ கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர் பட்டயம் அல்லது அதற்கு ஈடான சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இளங்கலை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

ஊதியம் : ரூ.12,000 தேர்வு முறை : நேர்முகத் தேர்வு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : மாவட்ட காசநோய் மையம், புளியந்தோப்பு, சென்னை - 600012. நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 15.03.2019 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய www.chennaicorporation.gov.in என்ற இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.