Latest News

மண்டையைப் பிளக்கும் வெயிலின் இடையில்… மழை பெய்ய வாய்ப்பு

 Tamil Nadu and Puducherry get rainfall in one or two places for the next two days
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கத்திரி வெயிலுக்கு முன்பே சதம் போடும், வெயிலின் இடைவேளையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

குமரிக்கடல் தென்கிழக்கு அரபிக் கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று தினங்களாக உள் தமிழகம் மற்றும் வட தமிழகத்தில் அனேக இடங்களில் அனல் காற்று வீசியது என்றும், வரும் 24 மணி நேரத்தினுள் தமிழகத்தில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களாக சென்னை, மதுரை, சேலம், வேலூர் என முக்கிய நகரங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால், இயற்கை உணவு வகைகளை மக்கள் நாடிச் செல்ல தொடங்கி உள்ளனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.