தேர்தல் நடத்தை விதிகளை மீறி சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில்
ராகுல் நிகழ்ச்சிக்கு அனுமதி என புகார் தெரிவித்தது பாஜக தான் என்று தமிழக
தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
சென்னை
ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மாணவிகள் மத்தியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்
காந்தி கலந்துரையாடிய விவகாரம் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி விசாரணை
நடத்த வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவு
பிறப்பித்துள்ளார்.
கல்லூரியில்
மாணவிகளுடன் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கலந்துரையாடல்
நடத்திய நிலையில், அரசியல் நிகழ்ச்சிக்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது
என்று கல்லாரிகல்வித்துறை சம்பந்தப்பட்ட கல்லூரியிடம் விளக்கம் கேட்டது.
அப்போது
பேசிய அவர், "அரசு உதவி பெறும் கல்லூரியில் அரசியல் ரீதியான நிகழ்ச்சியில்
ராகுல் காந்தி பங்கேற்றதால் நடவடிக்கை எடுக்குமாறு பா.ஜ.க சார்பில் புகார்
அளிக்கப்பட்டது. கல்லூரி மாணவிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடியது
தொடர்பான நிகழ்வு குறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு
உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் வழங்கும் அறிக்கைக்கு பின், இந்த விவகாரம்
தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்." என்று தெரிவித்தார்.

No comments:
Post a Comment