
தேமுதிகவின் வரலாற்றிலேயே மோசமான நாள் இதுவாகத்தான் இருக்க முடியும்.
காலையில் பியூஷ் கோயலுடன் பேசிய தேமுதிக சுதீஷ், அப்படியே திமுகவின்
துரைமுருகனுடனும் பேசியுள்ளார். அதை துரைமுருகனே அம்பலப்படுத்தி விட்டார்.
மொத்தத்தில் தமிழக மக்கள் மத்தியி்ல அம்பலப்பட்டுப் போய் நிற்கிறது
தேமுதிக.
தேமுதிகவின் வரலாறு காணாத பேரம் மக்களை அதிர வைத்துள்ளது. சீட்டுக்காக
அங்குமிங்கும் அது அலை பாய்வது அதிர்ச்சி தருவதாக உள்ளது.
தேமுதிக. அரசியல் வரலாற்றில் எந்த ஒரு கட்சியும் இப்படி மாறி மாறி பேரம்
பேசியிருக்க வாய்ப்பே இல்லை என்று சொல்லும் அளவுக்கு தலை சுற்ற வைத்து
வருகிறது தேமுதிக.
கண்டிஷன்கள்
வாக்கு வங்கி அதிகம் இல்லாத தேமுதிக ஆரம்பம் முதலே ஓவராக போனார்கள். அதனால்
இஷ்டத்துக்கும் பிடி கொடுக்காமலேயே இருந்தது. இந்த சந்தர்ப்பத்தில் திமுக
உள்ளே நுழைந்தது. தேமுதிக சொன்ன கண்டிஷன்களை கேட்டு வந்த வேகத்திலேயே
திரும்பிவிட்டது.
வெறும் 4தான்
இப்போது பாஜக பிடிவாதத்தினால் அதிமுக 4 சீட்டுகளை தர முன் வந்தது. இதை துணை
முதல்வரும் உறுதிசெய்தார். ஆனால் இந்த நான்கில் 2 தனித்தொகுதிகள்
என்பதுதானாம். ஏற்கனவே 7 கேட்டு வெறுத்து போன நிலையில், 5 தருவதாக வாக்கு
தந்த நிலையில், இப்போது வெறும் 4-ல் வந்து நிற்கவும் தேமுதிக நிர்வாகிகள்
அதிர்ச்சியடைந்து விட்டார்களாம்.
வெற்றி வாய்ப்பு?
குறிப்பாக நீலகிரி, தூத்துக்குடி, நாகை மற்றும் டெல்டா பகுதியில் ஒரு
தொகுதி தேமுதிகவிற்கு தரப்படலாம் என்ற பேச்சு எழுகிறது. இந்த தொகுதிகளை
அதிமுகதான் பரிந்துரைத்ததாம். ஆனால் ஒதுக்கப்பட்ட இந்த 4 தொகுதிகளிலுமே
வெற்றி வாய்ப்பு கடினம் என்றே தேமுதிக கருதி வருகிறது.

டிடிவி தினகரன்
செல்வாக்கு மிக்க தொகுதிகள் எதுவுமே இல்லாத நிலையில், இப்படி இந்த 4 சீட்
வாங்கி கூட்டணியில் போட்டியிட வேண்டுமா என்று தேமுதிக யோசிக்கிறதாம். ஏன்
தனித்து போட்டியிட கூடாது என்று ஒரு பக்கம் நிர்வாகிகள் கேள்வி எழுப்பி
வருகின்றனர். மற்றொரு பக்கம், டிடிவி பக்கம் போய்விடலாமா என்றும் கேட்டு
வருகிறார்கள்.

அவசர ஆலோசனை
இந்த நிலையில் தேமுதிக முன்னாள் பொருளாளர் இளங்கோவன் உள்ளிட்ட சில
முக்கியப் பிரமுகர்கள் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டுக்குப்
போயுள்ளனர். அங்கு அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தேமுதிக
சார்பில் பேரம் பேச வந்துள்ளார்களா அல்லது தேமுதிகவிலிருந்து விலகி
திமுகவில் சேர வந்துள்ளார்களா என்பது தெரியவில்லை.

பெரிய ட்விஸ்ட்
இதை விட பெரிய டிவிஸ்ட் என்னவென்றால் சுதீஷே துரைமுருகனிடம் ரகசியமாக
போனில் பேசியுள்ளார். அதை துரைமுருகனே அம்பலப்படுத்தி விட்டார்.
இதுகுறித்து துரைமுருகன் பேசுகையில், "சுதீஷ் போனில் பேசினார். அணி மாறி
வருவதாக கூறினார். ஆனால் எங்களிடம் சீட் இல்லையே என்று அவரிடம் கூறினேன்.
கடைசி நேரத்தில் வந்ததால் சீட் இல்லை. இருந்தால்தானே கொடுக்க முடியும்.
முடிவெடுக்க வேண்டியது திமுக தலைவர் தான்" என்றார் துரைமுருகன்.
No comments:
Post a Comment